டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தண்ணீருக்கு இரத்தம்: சாலை கிருஷ்ணமூர்த்தி நந்தகோபால் 

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:14 pm

கவிதைமணி

தண்ணீருக்(கு) இரத்தம் சிந்தும்    தரித்திரமும் போமோ இன்னும்கண்ணீரைத் தேக்கி னாலும்    கடல்நீர்போல் சேர்க்க லாமோதண்ணீரைப் பிச்சை கேட்கும்தன்மையுந்தான் போமே கேளீர்விண்ணீரைச் சேமிப் போமே  விரைந்ததனைச் சேர்த்து வாழ்வோம்!நம்தமிழ் நாட்டிலே நீருக்குப் பஞ்சம்வம்பு வழக்குச் செய்வதில் பஞ்சமில்அரசிலாய் ஆகுது! தண்ணீர்தந்திடத் தடுக்குது அண்டை மண்ணும்இதனால் சண்டைஅதனால் உயிர்பலிசிலபேர் இழப்புபலபேர் தவிப்புஊரில் கலவரம்பாரில் நிலவரம்கட்டுக் கடக்க 144 சட்டம்விட்டுக் கொடுக்க வியன்மதி இல்லைகுருதியும் சாலையில்பெருகுதல் வேணுமோமாநில அரசும் மைய அரசும்மாநிதி கொண்டு மறுவழி காணுமோஇன்னிலை மாற்றம் என்று வருமோநன்னாள் வருகை நலத்தைத் தருமோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.